"பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம்" - இலங்கை நாட்டு அதிபர் ரணில் விக்ரம்சிங்கே
இலங்கைப் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரம்சிங்கே தெரிவித்துள்ளார்.
70 சதவீதம் வரை உயர்ந்திருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25 புள்ளி 2 சதவீதமாகக் குறைந்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். அமைதியாக நமது கொள்கைகளில் தீர்மானமாக செயலாற்றியதன் பலனாக பணவீக்கம் குறைந்திருப்பதாகவும் அதன் காரணமாக விலைவாசிகள் குறைந்து இருப்பதாகவும் ஒட்டு மொத்த சமூகமும் இதனால் பயன் அடைந்திருப்பதாகவும் ரணில் விக்ரம்சிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மத்திய வங்கி மூன்றாண்டுகளில் முதன் முறையாக வட்டிவிகிதங்களைக் குறைப்பதாக அறிவித்தது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதன் முதல் அடையாளமாகவும் இது கருதப்படுகிறது.
Comments